பிடாடாரி பகுதியைச் சுற்றிப் பார்க்க இறுதி வாய்ப்பு

பிடாடாரி பகுதி மேம்பாட்டுக்கு மூடப்படுவதற்கு முன் அந்தப் பகுதியை இறுதியாக ஒரு முறை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு பிடாடாரி மரபுடைமைப் பயணம் ஒரு வாய்ப்பளிக்கிறது. கேலாங் சிராய் பழைய, புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப் புத் தலைவர்கள் குழுவின் ஏற்பாட் டில் நேற்று நடைபெற்ற பிடாடாரி மரபுடைமைப் பயணத்தில் மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் ஃபாத் திமா லத்தீஃப் கலந்துகொண்டார். முன்னாள் இடுகாட்டின் ஒரு பகுதி, மவுண்ட் வெர்னன் அஸ்தி மாடம், கூர்கா படை முகாம் ஆகிய வற்றைக் கடந்து நடைப்பயணம் அமையும். "இந்த பிடாடாரி மரபுடைமைப் பாதை இங்கு அதிக காலத்துக்கு இருக்காது, விரைவில் அதில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க உள்ளன," என்றார் டாக்டர் ஃபாத் திமா.

"இந்தப் பாதை ஒரு நாளைக்கு மறைந்து விட்டாலும் அதன் நினை வுகளாவது நம்முடன் இருக்கும்," என்றார் நேற்றைய நடைப் பயணத் துக்குத் தலைமை தாங்கிய திரு பேட்ரிக் இயோ. அடுத்த பிடாடாரி மரபுடைமைப் பயணம் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறும். அதில் ஆர்வமுள்ள வர்கள் மக்கள் கழகத்தின் one.pa.gov.sg எனும் இணையப் பக் கத்தில் தங்கள் பெயரைப் பதிந்து கொள்ளலாம்.

நேற்று நடைபெற்ற பிடாடாரி மரபுடைமைப் பயணத்தில் பலர் கலந்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!