அன்னையருக்கு அன்பான உபசரிப்பு

இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்கள் தாயாரிடம் அன்பாகவும் நன்றியுணர்ச்சியுடனும் நடந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் 'ப்ரோக்டர் அண்ட் கேம்பல்' நிறுவனம் (பி & ஜி) ஆண்டுதோறும் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று நடத்தப்பட்ட தனிப்பட்ட நிகழ்ச்சியில் அந் நிறுவனம் சிறப்பு ஒலிம்பிக் போட்டி யில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த உடற்குறையுள்ள விளையாட்டாளர் கள், அவர்களின் தாயார்கள், சிறப்பு விருந்தினர்கள், தேர்ந்தெடுக் கப்பட்ட பொது மக்கள் ஆகியோருக்கு இலவசமாக ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை கேத்தே திரை யரங்கில் காண்பித்தது. மேலும் அந்நிகழ்ச்சியில் என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனமும் (பி & ஜி) நிறுவனமும் இணைந்து $20,000க்கான காசோலையை சிங்கப்பூர் சிறப்பு ஒலிம்பிக் குழு வுக்கு வழங்கின.

இந்நிதி எட்டு வயதுக்கு மேற்பட்ட உடற்குறையுள்ள விளையாட்டாளர்களை 2017 சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்த பயன்படுத்தப்படும். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் டின் பெய் லிங், "ஒவ்வொரு தாயும் தம் பிள்ளையின் திறனை மேலும் வளர்க்க பாடுபடுகிறார். அவர்களில் இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியாளர்களின் தாயார்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தங்கள் பிள்ளைகளின் உடற்குறைபாட்டைப் பொருட் படுத்தாது அவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டி வாழ்க்கையில் தன்னம்பிக்கையை மேம்படுத்து கிறார்கள்," என்றார்.

சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த போட்டியாளர் ஒருவர் தம் தாயாருக்கு மலர் கொடுத்து நன்றி கூறினார். படம்: போர்ட்டர்நோவெல்லி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!