டாக்டர் சீ: ஆதரவு தந்த மக்களுக்குநன்றி

வில்சன் சைலஸ்

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்த லில் தாம் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து அத்தொகுதி மக்க ளுக்குச் சேவையாற்றவிருப் பதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலா ளரும் வேட்பாளருமான டாக்டர் சீ சூன் ஜுவான் கூறியுள்ளார். புக்கிட் பாத்தோட் இடைத் தேர்தலில் தோற்றது வருத்தமளித் தாலும் மோசமான தோல்வியாக அதைக் கருதவில்லை என்றார் அவர். தேர்தல் முடிவுகளுக்குப் பின் புக்கிட் கொம்பாக் அரங்கத்தில் நேற்று கட்சி ஆதரவாளர்களை நேரில் சந்தித்துப் பேசிய அவர், புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் களுக்குத் தமது மனமார்ந்த நன் றியைத் தெரிவித்ததுடன் இனி வரும் நாட்களில் அவர்கள் தம்மை இங்கு தொடர்ந்து பார்க்க முடியும் என்றார். மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர் திரு முரளிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், புக்கிட் பாத்தோக் தொகு தியையும் நன்கு புரிந்துகொள்வ தற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறினார்.

டாக்டர் சீக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இரவு 7.30 மணிக்கெல்லாம் அரங்கத் தில் கூடிய ஆதரவா ளர்கள் ‘மனம் தளரவேண்டாம்’, ‘நாங் கள் இருக்கிறோம்’ என்ற முழக் கங்களுடன் அவரை அரங்கத் திற்குள் வரவேற்றனர். ஒரு சிலர் அவரது தோல் வியை எண்ணி கண்ணீரும் சிந்தினர். எனினும் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நூற் றுக்கும் மேற்பட்டோர் டாக்டர் சீக்காகக் காத்திருந்து உற்சாக மளித்தனர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் கூடிய புக்கிட் கொம்பாக் விளையாட்டரங்குக்கு தம் மனைவியுடன் வந்த கட்சியின் தலைமைச் செயலாளரும் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் சீ சூன் ஜுவான் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிக்கு வாழ்த்துக் கூறி விட்டு தம் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை