அங் மோ கியோ- ஹவ்காங்கில் $1.2 மி. செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா

அங் மோ கியோ - ஹவ்காங் வட் டாரத்தில் $1.2 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்ட விளையாட் டுப் பூங்கா நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள அந்த சி யூவான் விளையாட்டுப் பூங்காவை அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்பின் ஆலோசகருமான பிரதமர் லீ சியன் லூங் திறந்து வைத்தார். இதையொட்டி நடைபெற்ற கேளிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் அதே தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட்டும் கலந்து கொண்டார். தெருக்காற்பந்து, கடல் நாகப் படகு பாவனைப் பயிற்சி போன்ற பல விளையாட்டுகளில் பங்கேற்று முயற்சி செய்த குடியிருப்பாளர்கள் தங்களுடைய திறன்களை பரி சோதித்துக் கொண்டனர்.

பன்னிரண்டு ஆண்டு பழமை யான விளையாட்டுப் பூங்காவை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மூன்று தலைமுறையினருக் கான உடலுறுதி சாதனங்கள், குழந்தைகள் விளையாடுமிடம் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் மெதுவோட்டப் பாதை, கூடைப்பந்து விளையாட்டு திடல் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டுப் பூங்கா புதுப் பிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹவ்காங் குடியிருப் பாளர்களான பேட்ரிக், வெரோ னிக்கா வோங், "ஐந்து வயது முதல் 19 வயது வரையிலான தங் களுடைய ஏழு பிள்ளைகளுக்கும் பலவித விளையாட்டுகளில் ஈடு படுவதற்கு சிறந்த வாய்ப்பை தந்துள்ளது," என்று கூறினர். இல்லத்தரசியான திருமதி வோங், 48, "திறந்தவெளி இடமும் உள்கட்டமைப்பு வசதிகளும் மனதைக் கிளர்ச்சியூட்டும் வகை யில் உள்ளன. எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக காட்சியளிக்கும் சுற்று வட்டாரத்தில் வெகு அருகில் இத்தகைய வசதி இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

தெருக் காற்பந்து விளையாட்டில் சிறுவர்களிடம் சிக்கியிருக்கும் பந்து எந்தப்பக்கமாக பாயும் என்பதை ஆவலுடன் கவனிக்கும் பிரதமர் லீ சியன் லூங். அருகில் சக நாடாளுமன்ற உறுப்பினரான டேரல் டேவிட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!