கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

முஹம்மது ஃபைரோஸ்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. துவாஸ் சவுத் அவென்யூ 1ல் அமைந்துள்ள இந்த விடுதியில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விளையாட்டுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன், 'செப்பாக் தாக்ராவ்', 'ஃபுட்சால்' ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட குழுவினருக்கு வெற்றிக் கோப் பைகளும் காத்திருந்தன. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இத்தகைய கேளிக் கை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழி யர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தாயகத்தில் உள்ள உற்றார் உறவினர்களைப் பிரிந்து அயல் நாட்டில் ஆண்டு முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற் பாட்டுக் குழுவின் உறுப்பினரான திரு டேரிக் டாங் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டு களாகப் பணிபுரியும் விருதாச் சலத்தைச் சேர்ந்த 40 வயது நூர்தீன் சாஹிப் ஷஃபி, "அனைத்து விளையாட்டுகளிலும் நண்பர்களுடன் பங்கெடுத்து மகிழ்ந்தேன்," என்றார். கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தளவாட ஏற்பாடுகளைச் செய்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 42 வயது கருத்தான் ரவிச்சந்திரன், "சக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் பொழுது கழிப்பதை உறுதி செய்யும் எனது பொறுப்பு நிறை வேறியிருப்பது மனநிறைவைத் தருகிறது," என்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட துவாஸ் வியூ விடுதியில் கிட்டத்தட்ட 14,000 வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 7,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் பங்ளாதேஷ், தாய்லாந்து, மியன்மார், ஃபிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!