40 சிறப்புப் படைகள் ஈடுபட்ட பன்னாட்டு ராணுவப் பயிற்சி

லிம் சூ காங் அருகே நிலப் பகுதி யில் சாகசங்களுடன் நடத்தப் பட்ட பன்னாட்டு ராணுவப் பயிற்சி நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட 14 சிறப்புப் படைகளைக் கொண்ட குழு பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டது. உயரமான கட்டடங்களில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங் களைத் தகர்ப்பது அந்தப் பயிற்சி. சிங்கப்பூர் ஆகாயப் படையின் 'சூப்பர் பூமா' ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் அந்தக் கட்டடங்களின் உச்சியை அடைந்து பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி யில் அந்த சிறப்புப் படைகள் ஈடு பட்டன. ஆசியான் தற்காப்பு அமைச்சர் களின் சந்திப்பு மற்றும் கடற்துறை பாதுகாப்பு, பயங்கரவாத முறி யடிப்புப் பயிற்சி ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த பாவனைப் பயிற்சி நடத்தப்ட்டது. பங்கேற்றுள்ள ராணுவப் படை கள் பயங்கரவாதத்தை முறியடிப் பதிலும் கடற்துறை மிரட்டல்களைச் சமாளிப்பதிலும் தங்களது திறன் களை வளர்த்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்த நிலப்பகுதிப் பயிற்சியை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், "இது ஒரு மிகப் பெரிய கடப்பாடு. இதுவரை நாம் நடத்தி வந்தவற்றில் ஆகப் பெரியது இது," என்றார். பயிற்சியில் பங்கேற்ற நாடு களின் பங்களிப்பைத் தெளிவாக வும் வலுவாகவும் உணர்த்தும் வகையில் பயிற்சி அமைந்திருந்த தாகவும் அமைச்சர் சொன்னார். "பொதுவான ஒரு மிரட்டலை எதிர்த்து பன்னாட்டுப் படைகள் ஒன்றிணைந்து வந்துள்ளன. "இவ்வாறு இணைந்து பணி யாற்றுவது முன்னோக்கு ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக் கில் ஒன்றோடொன்று இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நம் பிக்கையை வளர்க்கவும் உதவு கிறது," என்றார் அவர். தென்சீனக் கடற்பகுதியை சீனாவும் மலேசியா, புருணை, வியட்னாம், பிலிப்பீன்ஸ் போன்ற தென்கிழக்காசிய நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதன் மூலம் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்தப் பன்னாட்டுப் பயிற்சி நடைபெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் நடை பெறும் இந்தப் பயிற்சி கடந்த திங்கட்கிழமை புருணையில் தொடங்கியது. 18 நாடுகளைச் சேர்ந்த 3,500 படை வீரர்களும் 18 கப்பல்கள், 25 விமானங்கள், 40 சிறப்புப் படைக் குழுக்கள் போன் றவையும் இதில் ஈடுபட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!