கனரக வாகனம் மீது மோதி நொறுங்கிய கட்டுமான லாரி

கனரக வாகனம் ஒன்றின்மீது மோதிய கட்டுமான லாரி மிகவும் மோசமான அளவில் சேதம் அடைந்தது. இந்த விபத்து நேற்றுக் காலை சாங்கி கோஸ்ட் சாலையில் நிகழ்ந்தது. இரண்டு தடங்கள் கொண்ட அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கட்டுமான லாரி தடம் மாற முற்பட்டபோது விபத்து நிகழ்ந்தது. டயரில் காற்று போயிருந்ததால் சாலையின் இடது தடத் தில் நிறுத்தப்பட்ட கனரக வாகனம் மீது கட்டுமான லாரி மோதியதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழிடம் தெரிவிக்கப்பட் டது. தவிர்க்க முடியாத கார ணத்தால் கனரக வண்டி யைச் சாலையின் இடது தடத்தில் நிறுத்திய ஓட்டு நரான திரு டான், அது குறித்து பிற வாகனங் களுக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை சின்னங்களை சாலையில் வைக்க கனரக வாகனத்திலிருந்து இறங்கி இருந்தார். தமது கட்டுமான லாரிக்கு முன் இன்னொரு லாரி இருந்ததாகவும் அது வலது தடத்துக்கு மாறிய தால் கனரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப் பதைப் பார்க்கவில்லை என்றும் லாரி ஓட்டுநர் திரு நல்லையா தவமணி கூறி னார்.

விபத்தின் காரணமாக கனரக வாகனத்தில் எவ் வித சேதமும் தென்பட வில்லை. ஆனால் கட்டுமான லாரியின் இடதுப்பக்கம் நொறுங்கிப் போயிருந்தது. லாரிக்குள் இருந்த பொருட்களும் சாலையில் விழுந்து கிடந்தன. முன் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. காலை மணி 10.40 அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு விபத்தின் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவர் மருத்துவ மனைக்குச் செல்ல மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.