‘ஓடு, ஒளி, தெரிவி’: போலிஸ் காணொளி

பயங்கரவாதத் தாக்குதலின்போது செய்யவேண்டியவை குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கும் வகையில் காணொளி (படம்) ஒன்றை போலிஸ் வெளியிட் டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு, தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்தும் எஸ்ஜி பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் காணொளி வெளியிடப் பட்டது. காணொளியில் 'ஓடுங்கள், ஒளிந்துகொள்ளுங்கள், தெரிவி யுங்கள்' என்ற செய்தி வலியுறுத்தப் படுகிறது.

ஃபேஸ்புக் பக்கத்தில் பதி வேற்றம் செய்யப்பட்ட இந்த மூன்று நிமிடக் காணொளிப் பதிவில் இந்த மூன்று செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பொது மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் பற்றி விளக்கப்படுகிறது. 'ஓடுங்கள்' என்ற நடவடிக்கை யில் பயங்கரவாதத் தாக்குதல் மூண்டதும் அந்த இடத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தப்பிச் செல்ல பொதுமக்களிடம் வலியுறுத்தப்படு கிறது. தாக்குதல்காரர்களின் கண் களில் படாமல் அச்சமயத்தில் அவ்விடத்தில் மிகுந்த பாதுகாப்பு மிக்க பாதை வழியாக தப்பிச் செல்ல அறிவுரை வழங்கப்படு கிறது. அதுமட்டுமல்லாது மற்றவர் களை அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை அங்கேயே விட்டு விட்டு தங்களுடன் வருமாறு ஊக்குவிக்கவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!