தேசிய நாள்; நுழைவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய நாள் அணிவகுப்பு, அதன் இரண்டு முன்னோட்டக் காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளுக்கு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெள்ளிக் கிழமையிலிருந்து விண்ணப்பிக் கலாம். இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம், பத்து ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் தேசிய அரங்குக்குத் திரும்புகிறது. முன்னைய தேசிய அரங்கம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரினா பே மிதக்கும் மேடையிலும் பாடாங்கிலும் தேசிய நாள் கொண்டாட்டங்கள் நடை பெற்றன. இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம் பலதரப்பட்ட அம் சங்களையும் உள்ளடக்கியிருக் கிறது. ஆளில்லா தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது,

ஆகாய சாசகக் காட்சிகள், உள்ளரங்கு வாண வேடிக்கைகள் போன்றவை அவற்றில் சில. ஜூலை 23, 30 தேதிகளில் முன்னோட்டக் காட்சிகள் நடை பெறுகின்றன. தேசிய நாள் கொண்டாட்டம் ஆகஸ்டு 9ஆம் தேதி நடைபெறு கிறது. நான்கு வழிகளில் தேசிய நாள் அணிவகுப்பு நிகழ்ச்சி களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சின் தக வல்கள் தெரிவிக்கின்றன. குறுந்தகவல், அதிகாரபூர்வ இணையத்தளம் (www.ndp.org.sg), 'சேம்' அல்லது 'ஏஎக்ஸ்எஸ்' நிலையங்கள் ஆகியவற்றின் வழி யாக நுழைவுச் சீட்டுக்கு விண் ணப்பிக்க முடியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!