ஸ்கில்ஸ்ஃபியூச்சர்; கவனம் தேவை

சிங்கப்பூரர்களின் திறன் மேம்பாட்டுக்கென உருவாக்கப் பட்டுள்ள தேசிய திட்டமான ‘ஸ்கில்ஸ்ஃபுயூச்சர்’ திட்டத்தைப் பயன்படுத்தி சிலர் ஏமாற்றுவதாக சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு முகவை எச்சரித்துள்ளது. சில நிறுவனங்களும் தனிநபர்களும் பொதுமக்களை நாடி, அவர்களது ‘ஸ்கில்ஸ்ஃபுயூச்சர்’ நிதிக்கு ஈடாக பணம் தருவதாகக் கூறி வருவதாகவும் அத்தகைய நடவடிக்கைகள் கடுமையாக கொள்ளப்படும் என்றும் முகவை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.