பாசிர் ரிஸ் வீட்டில் கயிற்றில் கட்டப்பட்ட புறாக்கள்

பாசிர் ரிஸ் டிரைவ் 3, புளோக் 628ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர், புறாக்களால் பலவித தொல்லைகளை எதிர்நோக்கு கின்றனர். வீட்டுக்கு வெளியே துணியைக்கூட காய வைக்க முடியாத நிலை. இதே புளோக்கில் ஐந்தாவது மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் அறை சன்னல் வழியாக புறாக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இதனால் அங்கு பல புறாக்கள் பறந்து திரிகின்றன. அதுமட்டு மல்லாமல் டான் என்று அண்டை வீட்டுக்காரர்களால் அழைக்கப் படும் அந்த 40 வயது மாது, புறாக் களின் கால்களில் கயிற்றையும் கட்டி கட்டுப்படுத்தி வருகிறார்.

இவரது வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் 44 வயது திருமதி கோ, இதை ஒரு வழக்கமான புறாக்களின் தொல்லையாக இருக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியபோது கருதினார். ஆனால் உணவளிப்பதால் தான் புறாக்கள் இங்கு வருகின்றன என்ற விவரத்தை பின்னர் தெரிந்துகொண்டதாக நியூ பேப் பருக்கு அளித்த பேட்டியில் திருமதி கோ தெரிவித்தார். இதே புளோக்கில் 20 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு குடியிருப்பாளர் ஒருவர், சில புறாக்களின் கால்கள் கயி றால் கட்டப்பட்டிருந்தது என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்