லீ அறநிறுவனத் தலைவர் மறைவு; தலைவர்கள் அஞ்சலி

லீ அறநிறுவனத்தின் தலைவர் லீ செங் கீ மறைவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அனுதாபச் செய்தி அனுப்பி இருக்கிறார். "சிங்கப்பூரில் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் பலர் இருக் கிறார்கள். என்றாலும் திரு லீ செங் கீயைப் போன்றவர்கள் மிகவும் அரிதே. "அவர் ஒரு வள்ளல் என்ற முறையிலும் மிகவும் வெற்றிகர மான மனிதர்," என்று லீ செங் கீயின் துணைவியாருக்கு அனுப் பிய அனுதாபச் செய்தியில் பிரத மர் குறிப்பிட்டிருக்கிறார். "லீ செங் கீ அரிதானவர். சுய நலம் பாராதவர். தன்னடக்கம் மிக்கவர். சிங்கப்பூருக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற் றியவர்," என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

"லீ அறநிறுவனத்தின் தலை வர் என்ற முறையில் அவர் அந்த நிறுவனத்தை சிங்கப்பூரில் ஆகப் பெரிய தனியார் அறப்பணி நிறு வனமாக மாற்றினார். இனம், மொழி, சமயம் என்று பாராமல் அந்த அறநிறுவனம் பலவற்றுக் கும் ஏறக்குறைய $1 பில்லியன் கொடை அளித்திருக்கிறது. "இந்த முயற்சிகள் சிங்கப் பூரில் பரிவுமிக்க, கருணைமிக்க ஒரு சமூகத்தைப் பலப்படுத்த நமக்கு உதவி இருக்கின்றன," என்று பிரதமர் லீ தமது செய்தி யில் குறிப்பிட்டிருக்கிறார். திரு லீ செங் கீ தமது 95வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

லீ அறநிறுவனத்தின் தலைவர் லீ செங் கீக்கு அதிபர் டோனி டான் கெங் யாம் இறுதி மரியாதை செலுத்தினார். படம்: எஸ்டி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!