பாதசாரிக்கு மரணம் விளைவித்தவருக்கு அபராதம், தடை

காரில் சென்று கொண்டிருந்த பெண், காரை தடம் மாற்ற முற்­பட்­ட­போது பாதசாரி மீது மோதி­ய­தால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். காரை ஓட்டி வந்த சித்தி ஐனா மதுரி என்ற பெண்­ணிற்கு 4,000 வெள்ளி அப­ரா­த­மும் கார் ஓட்டு வதற்கு இரண்டாண்டு தடையும் நேற்று விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆசி­ரி­ய­ரான அப்­பெண்­ணின் கவ­னக்­குறை­வால் 83 வயது திரு­வாட்டி சான் போ குவா­னுக்கு மரணம் ஏற்­பட்­டது. இச்­சம்ப­வம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6 அருகே நடந்தது. சாலையில் தடம் மாற முற்­பட்ட சித்தி, திடீ­ரென்று திரு­வாட்டி சான் தனது காருக்கு முன்னால் சாலையைக் கடக்க முற்­படு­வதைக் கண்டார். ஆனால், காருக்­கும் திரு­வாட்டி சானிற்­கு­மான இடைவெளி சுமார் 10 மீட்டர் மட்டுமே இருந்த­தால், காரை நிறுத்த முடி­யா­மல் அவர் மீது மோதி­யதைத்­ தொ­டர்ந்து சான் சம்பவ இடத்­தி­லேயே உயிர் இழந்தார்.

Loading...
Load next