மூன்று ஆண்டுகளுக்கு முன், கேலப் ஸ்டேபலின் பாசிர் ரிஸ் குதிரை லாயத்திலிருந்த ஒரு குதிரையைப் பரிசோதனை செய்த அரசாங்க விலங்கு மருத்துவர், அந்தக் குதிரை இரண்டு நிமிடங் களுக்கு இடைவிடாமல் தண்ணீர் குடிப்பதையும் அரை மணி நேரம் வரை தொடர்ந்து உண்பதையும் கண்டார். ஒரு குதிரை இப்படிச் செய்வதை அவர் அதற்குமுன் பார்த்ததே இல்லை. அந்த உயர்ரக பெண் குதிரை யின் வலது பின்னங்காலில் கிரு மித் தொற்றி, மோசமாக வீங்கி யிருந்தது. விலங்கு மருத்துவர், குதிரையின் காயங்களைத் தின மும் இருமுறை கழுவக் கூறினார்.
ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு காயத்தில் ஆழமாகப் புதைந்திருந்த புழுக்களைக் குறடு களால் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. விலங்கு மருத்துவர் சொன்னபடி தினமும் இருமுறை காயங்களைக் கழுவியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. விலங்கைக் கொடுமைப்படுத் தியதற்காக கேலப் ஸ்டேபலுக்கு எதிராக அரசு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் முதல் இரண்டு நாள் (மே 10, 11) விசா ரணையின்போது இவ்விவரங்கள் வெளிவந்தன.