வேலையிடமரணங்கள்: கடுமையான தண்டனை

வேலை­­­யி­­ட மர­­­ணங்களைத் தவிர்க்­ கும் நோக்கில் கடுமை­­­யான தண் டனை, வேலை­­­யி­­­டப் பாது­­­காப்பை மேம்படுத்­­­து­­­வ­­­தில் முத­­­லா­­­ளி­­­களுக்கு கூடுதல் ஆதரவு போன்ற­ நட­வ­டிக்கை­களை மனி­­­த­­­வள அமைச்சு மேற்­கொள்­ள­வுள்­­­ளது. வேலை­­­யி­­­டத்­­­தில் பாது­­­காப்பு, சுகா­­­தா­­­ரத் தரம் குறைவாக இருந் தால், குறைந்த­பட்ச வேலை நிறுத்த உத்­த­ரவு காலத்தை அதி­­­க­­­ரிப்­­­பது உட்பட கடும் அப­ரா­தத்தை அமைச்சு அறி­­­வித்­­­துள்­­­ளது. குறைந்த­­­பட்­­ச வேலை நிறுத்த ஆணை இரு வாரங்களில் இருந்து தற்போது மூன்று வாரங்க­­­ளாக கூட்­டப்­­­பட்­­­டுள்­ளது. வேலை நிறுத்த உத்­­­த­­­ரவு பெற்ற­­­ நி­று­­­வ­­­னங்கள் அல்லது வேலையிட விபத்தைச் சந்­­­தித்த நிறு­­­வ­­­னங்கள் வர்த்­­­தக கண்­­­கா­­­ணிப்­­­புத் திட்­­­டத்­­­தின்கீழ் கொண்டு வரப்படும். அத்­­­து­­­டன் அந்­நி­று­­­வ­­­னங்களின் வேலை அனுமதி ‘பாஸ்’கள் தற்­­­கா­­­லி­­­க­­­மாக நிறுத்­­தி வைக்­கப்­­­ப­­­ட­­­லாம். பாது­­­காப்­புப் பிரச்­­­சினை­­­களைச் சரி­­­செய்­­­யும் வரையில் அந்­­­நி­­­று­­­வ­­­னங் கள் வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களை வேலையில் சேர்க்க முடியாது.

கட்டுமானப் பகுதியைப் பார்வையிட்ட மனிதவள துணை அமைச்சர் சேம் டான் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்