ஏமாற்றுப் பேர்வழிக்கு நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னைய துணைப்பிரதமர் வோங் கான் செங்கின் சகோதரர் என்று கூறி பலரை நம்ப வைத்து 520,000 வெள்ளி வரை ஏமாற்றிய ஒருவருக்கு நேற்று நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நொடித்துப் போனவரான வோங் கோக் கியாங் என்று அழைக்கப்படும் வோங் கோக் கியோங், 63, தற்போது $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள் ளார். அவரது மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. நொடித்துப்போனவர் சட்டத் தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் மீதான இதர ஆறு குற்றச்சாட்டுகளை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார். கடந்த 2007ஆம் ஆண்டில் 'மனோர் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூன்று இயக்குநர் களிடம் தம்மை திரு வோங் கான் செங்கின் சகோதரர் என்று கூறி நம்ப வைத்தார். அதோடு யுங் ஹோ ரோட்டில் உள்ள சொத்தை வாங்குவதற்கான 20 விழுக்காட்டுக்-கு ஈடான 180,000 வெள்ளி தொகையை அவர்களிடம் வோங் பெற்றார். மற்றொரு நிலவரத்தில் அதே நிறுவனத்திடம் மேலும் 240,000 வெள்ளியை அவர் மோசடி செய் தார். இருந்தாலும் மனோர் நிறு வனத்திடம் ஏமாற்றிய தொகையில் 209,000 வெள்ளியை அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார்.

ஏற்கெனவே நொடித்துப்போன நிலையில் நிறுவனத்தையும் மற்றவர்களையும் வோங் கோக் கியோங் ஏமாற்றியிருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!