அதிபர் டோனி டான்: திரு ஹெங் சீராக உள்ளார்

மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு டான் டோக் செங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டை அதிபர் டோனி டானும் அவரது துணைவியாரும் நேற்று சென்று சந்தித்தனர். திரு ஹெங் சீரான நிலையில் உள்ளதை அறிந்து தாம் நிம்மதி அடைந்துள்ளதாக தமது ஃபேஸ்புக் இணையத்தளத்தில் அதிபர் டான் குறிப்பிட்டிருந்தார். திரு ஹெங்கை அவரது குடும்பதினரும் மருத்துவமனை ஊழியர்களும் மிகவும் நல்ல முறையில் கவனித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.