தோட்டக்கலை மூலம் மனதிற்குப் புத்துணர்ச்சி

ஹைதராபாத் சாலையில் அமைந் திருக்கும் 'ஹோர்ட்பார்க்'கில் தோட்டக்கலை மூலம் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் புதிய தோட்டம் நேற்று திறக்கப்பட்டது. குடியிருப்பாளர்களின் நல னைக் கருத்தில் கொண்டும் எவ்வித சிரமமின்றி மூப்படைய முதியோருக்கு உதவும் வகையிலும் புதிய தோட்டத்தை தேசிய பூங்கா வாரியம் திறந்து வைத்துள்ளது. திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். பொதுப் பூங்காவில் தோட்டக் கலை மூலம் மனதிற்குப் புத்து ணர்ச்சி அளிக்கும் தோட்டம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

செடிகளையும் இயற்கையையும் பயன்படுத்தி சிந்தையைத் தூண்டும் வகையில் இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தின் ஒவ்வோர் அம்சமும் மனதிற்கு புத்துணர்ச் சியைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் அதை உருவாக்கியவர்கள் மிகுந்த சிரத்தையுடன் செயல்பட்டுள்ளனர். தோட்டத்துக்கு வருபவர்களின் சிந்தையைத் தூண்ட வண்ண மயமான பூக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

பொதுப் பூங்காவில் முதல்முறையாக அமைக்கப்பட்டிருக்கும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் தோட்டத்தில் முதியோர் உட்பட அங்கு வருபவர்களின் சிந்தையைத் தூண்டும் பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சக்கரநாற்காலி பயன்படுத்துபவர்கள் அங்கு வந்து செல்ல ஏதுவாக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!