கணவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளாத பெண்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் கணவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மனைவி நடந்துகொள்ளாமல் போன காரணத்தால் பல திருமணங்கள் முறிந்துபோய்விட்டதாக தெரியவந்துள்ளது. ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் நடந்துகொள்ளாத வாழ்க்கைத்துணைகள் சம்பந்தப்பட்ட பல விவகாரங்களைத் தாங்கள் கையாண்ட தாகவும் அவற்றில் ஒவ்வொரு பத்து விவகாரங்களிலும் ஏறக்குறைய பாதியில் மனைவியரே திருமண முறிவுக்குக் காரணமாக இருந்ததாகவும் பழுத்த அனுபவம் வாய்ந்த குடும்ப வழக்கறிஞர்களும் தனியார் புலன்விசாரணை யாளர்களுமான 20 பேர் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.

10 ஆண்டுகளுக்கு முன் பார்க்கையில் இத்தகைய 10 விவகாரங்களில் இரண்டு அல்லது மூன்றில் மட்டுமே பெண்கள் மீது தவறு இருந்தது. 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் கணவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக நடந்துகொள்ளாத மனைவி என்ற பேச்சு கேட்கமுடியாத ஒன்றாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.