வாட்டன் எஸ்டேட்டில் கொசு ஒழிப்பு தீவிரம்

தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த இரண்டு நாட்களில் வாட்டன் எஸ்டேட் குடியிருப்பு இடத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 500க்கும் அதிக கட்டடங்களில் சோதனையிட்டது. மொத்தம் 30க்கும் அதிக கொசு இனப்பெருக்க இடங்களை வாரியம் அழித்தது. டெங்கி உள்ளிட்ட பல தொற்றுநோய்களை ஏற்படுத்தி வரும் கொசுக்களை துடைத்து ஒழிக்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று விளக்கினார். சிங்கப்பூ-ரில் முதன் முதலாக ஒருவருக்கு ஸிக்கா தொற்றுநோய் கண்டிருந்தது கடந்த வெள்ளிக் கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அந்த 48 வயது ஆடவர் தொழில் நிமித்தமாக பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகருக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்பி னார். அவர் உடலில் ஸிக்கா கிருமிகள் தொற்றி இருந்தது இங்கு பரிசோதனையில் தெரிய வந்தது.

அதன்பிறகு அந்த ஆடவர் டான் டோக் செங் மருந்துவமனை யின் தொற்றுநோய்ப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நன்கு குணம் அடைந்து வருவதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் கோர் குறிப்பிட்டார். ஸிக்கா தொற்றுநோய் பாதிப் புக்கு இலக்கான அந்த ஆடவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவர் தொடர்ந்து தனியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பார். ஸிக்கா கிருமிகள் அவர் உடலை விட்டு முற்றிலும் அகன்றதும் அவர் விடுவிக்கப்படுவார்.

முதன்முதலாக வாட்டன் எஸ்டேட் பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பதை அடுத்து அந்தப் பேட்டையில் அதிகாரிகளும் குத்தகை ஊழியர்களும் பரிசோதனைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். அறிவிப்பு கடிதங்களைக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்