ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் மாணவர்கள் அதிகரிக்கலாம்

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8,165க்கு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 7,300ஆக இருந்தது. ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததாலும் சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களில் அதிக இடங்கள் இருந்ததாலும் அண்மைய ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் கல்வி மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால் ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பு அண்மையில் குறைந்தது. இம்மாதத்தின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு ஒப்பந்தமும் போடப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கலாம் என்று மாணவர் சேர்க்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!