தீ விபத்து; பார்க்வே பரேட் கடைத் தொகுதி மூடப்பட்டது

தீ மூண்டதால் பார்க்வே பரேட் கடைத் தொகுதி அடுத்த அறி விப்பு வெளியிடும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டாவது மாடியில் உள்ள கடையில் தீ மூண்டதாக மரின் பரேட் மாலில் பணியாற்றும் ஊழி யர்கள் சிலர் கூறியதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. நள்ளிரவுக்கு முன் தகவல் கிடைத்து அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், கிடங்கில் தீ மூண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனே கதவை உடைத்து கிடங்குக்குள் நுழைந்த அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையே நேற்று மதியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அங்கு சென்றபோது தீப்பற்றிய வாடையை உணர்ந்தனர். பாதுகாப்பு தலைக் கவசம் அணிந்த ஊழியர்களும் கட்டத்திலிருந்து வெளியே வருவதைக் காண முடிந்தது என்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இந்த நிலையில் நுழைவாயி லிலிருந்து ஊழியர் ஒருவர், கடைத்தொகுதி ஒரு நாள் மூடப் படுகிறது என்று வாடிக்கையாளர் களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய பார்க்வே பரேடின் பொது நிர்வாகி ஜென்னி கூ, தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தார். “சுத்தம் செய்யப் பட்டு சோதனைகள் மேற்கொள்ளப் படுவதால் கடைத்தொகுதி மூடப் படுகிறது,” என்றார் அவர்.

பார்க்வே பரேட் நேற்று மூடப்பட்டதால் அங்கு வந்த வாடிக்கையாளர்களில் சிலர் ஏமாற்றமடைந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்