பக்கவாத நோயாளிகளுக்குப் புதிய நல்வாழ்வு மையம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் திரும்பவும் தங்கள் வாழ்க்கையை நடத்தவும் வேலையில் சேரவும் உதவி செய்யும் நோக்குடன் புதிய நல்வாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரெட்ஹில் வட்டாரத்தில் இருக்கும் இந்த மையம் பக்கவாத நோயாளிகளுக்கான ஆதரவு நிலையத்தால் அமைக் கப்பட்டுள்ளது. புதிய மையத்தை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். இந்த மையம் சிறப்பு தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்குத் தேவையான திட்டங்களையும் உள்ளடக்கிய சிங்கப்பூரின் முதல் பாலர் பள்ளி அமைந்திருக்கும் 'எனேபலிங் வில்லேஜ்'ஜில் இருக்கிறது.

சுயமாக நடமாடும் திற னைத் திரும்பவும் பெற பக்க வாத நோயாளிகளுக்கு உத வும் வகையில் புதிய மையம் நடவடிக்கைகளை நடத்து கிறது. மூச்சுப் பயிற்சி போன்ற நடவடிக்கைகள் மூலம் உளவியல் ரீதியிலும் மையம் ஆதரவு வழங்குகிறது. மையத்தின் தொண்டூழியர் களை சுகாதார அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். "நமது பராமரிப்புச் சேவைகள் நிலைத்திருப்பதை உறுதி செய்ய இருப்பில் இருக்கும் வளங்களை முழுமை யாகப் பயன்படுத்தும் வழி வகைகளை நாம் மேம்படுத்த வேண்டும்," என்றார் திரு கான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!