பெஞ்சமின் லிம் மரணம்: குடும்பத்துக்கும் பள்ளிக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள்

நார்த் வியூ உயர்நிலைப்பள்ளி மாணவர் பெஞ்சமின் லிம் மரணம் அடைந்த நாளன்று என்ன நடந்தது என்பதில் அவரது பள்ளிக்கும் குடும்பத்துக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பது நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற மரண விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று 14 வயது பெஞ்சமினிடம் போலிசார் விசாரணை நடத்தியதை அடுத்து, அவர் வீடு திரும்பியதும் மாலை மணி 4.13 மணிக்கு பள்ளி ஆலோசகர் திருவாட்டி கேரி லுங் பெஞ்சமினின் தாயாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மறுநாள் நடைபெறும் உயர் நிலை 3 மாணவர்களுக்கான முகாமில் பெஞ்சமின் பங்கேற் பதைவிட அவர் தமது குடும்பத்தா ருடன் வீட்டில் இருப்பது நல்லது என்று பெஞ்சமினின் தாயாரிடம் கூறிய தாக திருவாட்டி லுங் கூறினார். இந்த ஆலோசனைக்கு பெஞ்சமினின் தாயார் இணக்கம் தெரிவித்ததும் திருவாட்டி லூங் அது குறித்து பள்ளி முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறினார்.

ஆனால் இதனை மறுத்த பென் ஜமினின் தாயார், உயர்நிலை 3 மாணவர்களுக்கான முகாமில் பங்கேற்க தமது மகனுக்கு அனு மதி வழங்கப் போவதில்லை என்று பள்ளி முடிவெடுத்துவிட்டதாகத் திருவாட்டி லுங் தம்மிடம் தெரி வித்ததாக அவர் கூறினார். முகாமிற்கு வருவதற்குப் பதிலாக பெஞ்சமினை வீட்டில் இருந்தவாறு இணையம் மூலம் பாடம் கற்குமாறு பள்ளி கூறியதாக பெஞ்சமினின் தாயார் தெரிவித்தார். பென்ஜமினிடம் போலிசார் விசாரணை நடத்த வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் அவரது தாயாரும் சகோதரியும் பள்ளிக்கு விரைந்தபோது பள்ளி முகாமில் பென்ஜமின் பங்கேற்பது குறித்து கலந்துரையாடப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த விசாரணை அதிகாரி முகம்மது ரசிஃப் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!