பாலர் பள்ளியில் திடீர் தீ; யாருக்கும் காயமில்லை

புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள 'பிரீ ஸ்கூல் பை தி பார்க்' பாலர் பள்ளியில் நேற்றுக் காலை தீ மூண்டது. தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் தீப்பற்றிக்கொண்டது. மேல் மாடிகளுக்குத் தீ பரவியதை அடுத்து கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். தீயணைக்கப்பட்டதை அடுத்து காலை 8 மணி அளவில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்தபோது வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை என்று அறியப்படுகிறது.

தீ மூண்ட பாலர் பள்ளி கட்டடத்தைச் சூழ்ந்துகொண்ட கரும்புகை. படம்: டென்வர் டே

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!