இந்திராணி ராஜா தலைமையில் சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு

அனைவரும் மேம்பட்ட நீதியைப் பெற ஏதுவாக சிங்கப்பூரின் சிவில் நீதித் துறையை மறுசீரமைப்பது குறித்து ஆராய சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு ஒன்றை சட்ட அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. சட்ட பிரதிநிதித்துவம் இல்லாத தனிமனிதர்கள், சிறிய, நடுத்தர வர்த்தகர்களும் இக்குழுவில் அடங்குவர் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது. எட்டு பேரைக் கொண்ட இக்குழுவுக்கு சட்டம், நிதிக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தலைமை வகிப்பார். குழு தனது ஆய்வை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.