நிறுவனங்கள்: ஊழியர்கள் கிடைப்பதே சவால்

ப. பாலசுப்பிரமணியம்

அரசாங்கம் அறிவித்திருக்கும் வரவுசெலவுத் திட்டம் தொழில்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் எத்தகைய திட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தும், அதற்கு எவ்வாறு தகுதி பெறுவது போன்ற விவரங்களை அறிவதில் ஆர்வம் தெரிகின்றது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா கூறினார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த வரவுசெலவுத் திட்டம் 2016 கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமை சங்க மகளிர் அணியின் ஏற்பாட்டில் நடந்த இக்கலந்துரையாடலில் தொழில் முனைவர்கள், நிபுணர்கள், மாணவர்கள் என சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

லிட்டில் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்வோர், இந்திய நாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பது சிரமமாக இருக்கிறது என்றும் சிங்கப்பூரர்கள் அத்தகைய வேலைகளைச் செய்ய முன்வருவ தில்லை என்றும் கலந்துரை யாடலில் கவலை தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச் சர், புத்தாக்க முறையில் வியாபார உத்திகளை மாற்றி அமைப்பதே இதற்குத் தீர்வாக விளங்கும் என்றும் வெளிநாட்டு ஊழியர் களை எப்போதும் சார்ந்திருக்க முடியாது என்றும் கூறினார். இதற்கு நல்ல உதாரணமாக சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி தங்களது வியாபார முறையை மாற்றியமைத்துள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு சிங்கப்பூரர்களை வேலைக்கு ஈர்ப்பது என்ற கேள்வி கேட்கப் பட்டது.

(இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்தும் திரு ஜி.டீ. மணி, திரு ஆர். தினகரன், அமைச்சர் இந்திராணி ராஜா, திரு ர. நாராயணமோகன், குமாரி கிரிஸ்தொபென் ஃபு. படம்: லிஷா மகளிர் அணி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!