பரவசமூட்டும் விமான சாகசக் காட்சிகள்

சுதாஸகி ராமன்

சிங்கப்­பூர் வான்­வெ­ளிக்­குள் நுழைந்த சந்­தே­கத்­துக்­கு­ரிய விமா­னத்தை இடை­ம­றிக்க வானத்தை நோக்கிக் கிளம்­பும் நான்கு 'ஃபைட்­டர் ஜெட்' போர் விமா­னங்கள். ஆகாய, தரை செயல்­முறை­களை மேற்­கொள்­ளும் CH-47 'சின்னூக்', AH-64D ரக ஹெலி­காப்­டர்­கள். இவ்வாறு நாளையும் ஞாயிற்றுக் கிழமையும் நடை­பெ­ற­வி­ருக்­கும் சிங்கப்­பூர் குடி­ய­ரசு ஆகாயப் படையின் பொது வர­வேற்பு தினத்­தில் ஆகாயப் படையில் இருக்­கும் போர் விமா­னங்களை­யும் படையின் திறன்களை­யும் விமான சாகசக் காட்­சி­களின் மூலம் பொது மக்கள் கண்ட­றி­ய­லாம். சுமார் 30 நிமி­டங்களுக்கு நடை­பெ­ற­வி­ருக்­கும் இந்த விமான சாகசக் காட்சியை சனிக்­கிழமை அன்று காலை 10.30க்கும் பிற் ­பகல் 2.30க்கும் ஞாயிற்­றுக்­கிழமை காலை 11.30க்கும் மாலை 4.30க்கும் பார்வை­யா­ளர்­கள் கண்டு ரசிக்­க­லாம்.

ஆகாய, தரை செயல்­முறை­களின் ஓர் அங்க­மாக ராணுவ வீரர்­கள் சிலரைக் கொண்ட கனரக வாக­னத்தை CH-47 'சின்னூக்' ரக ஹெலி­காப்­டர்­கள் தூக்கிச் செல்லும். இந்தப் பணியைச் சீராகச் செய்யும் பொறுப்பு இரண்டா­வது வாரண்ட் அதிகாரி விஜய்­கு­மார் ரெங்க­பாஷ்­ய­த்தி­டம் ஒப்­படைக்­கப் ­பட்­டுள்­ளது. "காற்றின் வேகம், வாக­னத்­தின் எடை ஆகி­ய­வற்றை அறிந்து வாக­னத்தைத் துல்­லி­ய­மாக எடுத்து சுமந்­து செல்வது மிகவும் முக்­கி­யம். இந்தச் சாகச காட்­சிக்­காக ஒரு மாதமாக கடுமை­யான பயிற்­சி­களை எடுத்து வந்தோம்," என்றார் அவர். ஐந்தாண்­டு­களுக்­குப் பிறகு இவ்­வாண்டு நடை­பெ­றும் பொது வர­வேற்பு தினத்­தில் பார்வை­யா­ளர்­கள் கேளிக்கை­யான நட­வ­டிக்கை ­களை எதிர்­பார்க்­க­லாம் என்று சிங்கப்­பூர் குடி­ய­ரசு ஆகாயப் படை கூறி­யுள்­ளது.

ராணுவ வீரர்கள் சிலரைக் கொண்ட கனரக வாகனத்தை CH-47 'சின்னூக்' ரக ஹெலிகாப்டர்கள் தூக்கிச் செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளார் இரண்டாவது வாரண்ட் அதிகாரி விஜய்குமார் ரெங்கபாஷ்யம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!