மரண தண்டனைக்கு எதிரான கடைசி நேர மனுவும் நிராகரிக்கப்பட்டது

சரவாக் நாட்டைச் சேர்ந்த கோ ஜாபிங் மரண தண்டனைக்கு எதிராக செய்­தி­ருந்த கடைசி நேர மனுவை ஐந்து நீதி­ப­தி­களைக் கொண்ட மேல்­முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று நிரா­க­ரித்­தது. கொள்ளை நட­வ­டிக்கை­யின் போது ஆடவர் ஒருவரை மரக்­கிளை­யால் தலையில் அடித்து, அவரைக் கொலை செய்ததற்காக 2010ல் 31 வயது கோவுக்கு மரண தண்டனை விதிக்­கப்­பட்­டது. 2011ல் கோவின் மேல்­முறை­யீடு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. மரண தண்டனை சட்­டத்­தில் ஏற்­பட்ட மாற்­றங்களைத் தொடர்ந்து 2013ல் கோ மறு­ப­டி­யும் மேல்­முறை­யீடு செய்தார். அதில் தண்டனை மாற்­றப்­பட்டு ஆயுள்­தண்டனை­யும் 24 பிரம்ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன. ஆனால் அரசு தரப்­பின் மேல்­முறை­யீட்டைத் தொடர்ந்து 2015 ஜன­வ­ரி­யில் மீண்டும் மரண தண்டனை விதிக்­கப்­பட்­டது.

Loading...
Load next