முதிய தம்பதியரை ஏமாற்றிய காப்புறுதி முகவருக்கு 8 ஆண்டு சிறை

முதிய தம்பதியரை ஆறு ஆண்டு காலமாக ஏமாற்றி அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $8.89 மில்லியன் பணத்தை பெற்றதற்காக சேலி லோ அய் மிங் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் முகவரான சேலி, 2002ல் போலி காப்புறுதித் திட்டம் ஒன்றை திரு ஓங், 78, அவர் மனைவி இருவருக்கும் விற்று அவர்களிடமிருந்து பல மில்லியன் வெள்ளியைப் பெற்றார். பின்னர் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி மேலும் பல காப்புறுதித் திட்டங் களை திரு ஓங், அவருடைய மனைவி ஆகியோர் பெயர் களில் அவர்களுக்குத் தெரியாமலும் அவர்களின் அனுமதி இல்லாமலும் வாங்கினார். இவற்றின் மூலம் சேலிக்கு $200,000க்கும் மேலாகத் தரகுப் பணமாகக் கிடைத்தது.

திரு ஓங் தம்பதியரிடமிருந்து ஏமாற்றிப் பெற்ற பணத்தி லிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைத் தனது பங்காளி ஒருவரின் பெயருக்கு மாற்றினார் சேலி. அத்துடன், S$5.28 மில்லியனை பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட்சில் தமது பெயரிலுள்ள நிறுவனம் ஒன்றில் போட்டார். மேலும், கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை கேர்ன்ஹில், செந்தோசா கோவ் பகுதிகளில் கொண்டோமினிய வீடுகளும் வாங்கியுள்ளார் என்றும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.