$60 மில்லியன் ஆய்வுக்கூடம்

எஸ்ஆம்ஆர்டியும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) இணைந்து தாக்குப்பிடிக்கக்கூடிய, நம்பகமான ரயில் முறை தொடர்பான பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானால் நேற்று திறந்து வைக்கப்பட்ட $60 மில்லியன் மதிப்புள்ள இந்த ஆய்வுக்கூடத்துக்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் நிதி அளிக்கிறது. பொறியியல் துறையில் என்டியுவுக்கு உள்ள பலத்தின் உதவியுடன் எஸ்ஆம்ஆர்டி தனது ரயில் செயல்முறைகளை யும் பொறியியல் ஆற்றல்களை யும் ஒருங்கிணைக்கும்.

கடந்த ஆண்டு 30 நிமிடங்களுக்கும் மேலாக நிகழ்ந்த 14 சேவைத் தடையால் பாதிக்கப்பட்ட நம்பகத்தன்மையை மேம்படச் செய்யும் ஆகக் கடைசி முயற்சிதான் இந்த ஆய்வுக்கூடச்செயல்பாடு. இந்த ஆய்வுக்கூடம் 100 பட்டக்கல்வி மாணவர்கள், 35 மேல்நிலை பட்டதாரிகள், 60 ஆய்வாளர்களுக்கு பல்வேறு பொறியியல் நிபுணத்துவத்தில் பயிற்சிகள் அளிக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது