ஊழியருக்கான சமூக, சமய வழிகாட்டி

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய சமூக ஈடுபாட்டு, சமய வழிகாட்டி திட்டத்தை மினி என்வைரன்மண்ட் சர்விசஸ் அறிமுகம் செய்து வைத்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டதற்காக பங்ளாதேஷ் ஊழியர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்பில் பயங்கரவாத அச்சுறுத்தலைச் சமாளிக்கும் தொடர் நடவடிக்கைகளுக்கு தங்கும் விடுதிகளும் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை வகுத்துள்ளதாக மினி என்வைரன்மண்ட் சர்விசஸ் நிறுவனம் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களைச் சமூக நவடிக்கை களில் ஈடுபடுத்தி திசைதிருப்பும் போதனைகளால் பாதிக்கப்பட்டு அல்லது பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நேர்வழிப் படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டது. சக ஊழியர்கள் அறிவுறுத்தும் போது அது குழப்பமான மனநிலையில் உள்ளவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க மேலும் ஏதுவாக இருக்கும் என்று திட்டத்தை உருவாக்கியவர்கள் நம்புகின்றனர். காக்கி புக்கிட்டிலுள்ள மினி என்வைரன்மண்ட் சர்விசஸ் நிறுவனத்தின் ‘தி லியோ’ தங்கும் விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு இத்திட்டம் அறிமுகமானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் அம்ரின் அமின் (இடமிருந்து இரண்டாவது) ஊழியர்களுடன் அளவளாவினார். அவருக்கு அருகில் மினி என்வைரன்மண் சர்விசஸ் நிறுவனர் திரு முகமது அப்துல் ஜலில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்