அமைச்சர் மசகோஸ்: மசெக திட்டங்களால் அல்ஜுனிட் மக்களுக்கு தொடர்ந்து நன்மை

அல்ஜுனிட் குழுத் தொகுதி எதிர்த்தரப்பு வசம் இருந்தாலும் மக்கள் செயல் கட்சி அமல் படுத்திவரும் செயல்திட்டங்கள், வழங்கி வரும் சேவைகள் மூலம் அந்தக் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள் இன்னமும் தொடர்ந்து நன்மை அடைந்து வருகிறார்கள் என்று அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து இருக் கிறார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சரான மசகோஸ் நேற்று யூனோஸ் வட்டாரத்துக்குச் சென்றார். அந்தப் பகுதி பாட்டாளிக் கட்சி நிர்வகித்து நடத்தும் அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட வட்டார மாகும். பட்டாளிக் கட்சி சென்ற 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 50.95% வாக்குகளைப் பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது.

யூனோஸ் வட்டாரத்திற்கு நேற்று தாம் மேற்கொண்ட வருகை, அடித்தளத்தை தெரிந்துகொள் வதற்காக அமைச்சர்கள் மேற் கொள்ளும் அமைச்சர்நிலை சமூக வருகையின் ஒரு பகுதியாக இடம்பெற்றது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த வருகை மக்கள் செயல் கட்சித் தொகுதிகளிலும் எதிர்க் கட்சித் தொகுதியிலும் மேற்கொள் ளப்படுகிறது. அமைச்சர் மசகோஸ் நேற்று அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலுக்குச் சென்றார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கு உட்பட்ட யூனோஸ் தொகுதிக்கு சமூக வருகை மேற்கொண்ட சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (வலமிருந்து 3வது) அத்தொகுதி குடியிருப் பாளர்களுடன் உரையாடுகிறார். அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அத்தொகுதிக்கான அடித்தள ஆலோசகர் திரு சுவா எங் லியோங். படம்: சாவ் பாவ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்