தேசிய மரபுடைமைக் கழகம் வெளியிடும் அஞ்சல்தலைகள்

தேசிய மர­புடைமைக் கழ­கத்­து­டன் இணைந்து சிங்­போஸ்ட் நிறு­வ­னம் புதிய அஞ்சல்­தலை­களை வெளி­யி­ட­வுள்­ளது. ‘மித்ஸ் அண்ட் லெஜண்ட்ஸ்’ என அழைக்­கப்­படும் அந்த அஞ்சல்­தலை­கள் சிங்கப்­பூ­ரின் தெற்குத் தீவு­க­ளான சிஸ்டர்ஸ் ஐலண்ட்ஸ், கூசூ ஐலண்ட் ஆகியவற்றின் நாட்­டுப்­ பு­றக் கதை­களைச் சித்­தி­ரிப்­பவை­யாக உள்ளன. நாளை இந்த அஞ்சல்­தலை­கள் வெளியீடு காணும். கடுமை­யான புய­லி­லி­ருந்து இரண்டு மீன­வர்­களைக் காப்­பாற்றி தம் முதுகில் அவ்­வி­ரு ­வரை­யும் சுமந்­து­கொண்டு இந்தத் தீவுக்கு பெரிய ஆமை ஒன்று வந்த பிறகு அந்தத் தீவே அவர்­ க­ளது இல்­ல­மா­னது. அந்த ஆமையின் நினைவாக கூசூ ஐலண்ட் என அத்­தீ­வுக்கு பெய­ரி­டப்­பட்­டது. நாளை முதல் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை சன்டெக் சிட்­டி­யில் உள்ள அடுத்த தலைமுறை அஞ்ச­ல­கத்­தில் பொதுக் கண்­காட்சி ஒன்றை சிங்­போஸ்ட், தேசிய மர­புடைமைக் கழகம், சிங்கப்­பூர் அஞ்சல்­தலைப் பிரிவு ஆகி­யன இணைந்து ஏற்பாடு செய்­துள்­ளன.

தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்போஸ்ட் நிறுவனமும் இணைந்து நாளை வெளியிடவுள்ள கூசூ ஐலண்ட் (மேல் வரிசை), சிஸ்டர்ஸ் ஐலண்ட்ஸ் தொடர்பான நாட்டுப்புறக் கதைகளைச் சித்திரிக்கும்
அஞ்சல்தலைகள். படம்: சிங்போஸ்ட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

அட்மிரல்டி பிளேஸ் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய சந்தை உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்கு மாறுவது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டு இருந்தது. படம்: விஜயா கந்தசாமி ஃபேஸ்புக்

24 Mar 2019

சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி