விபத்துகளைக் கையாள விமான நிலைய ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

விமா­ன ­நிலைய ஊழி­யர்­களுக்­குப் பயிற்சி அளிப்­ப­தற்­காக, மேம்படுத்­தப்­பட்ட மிகவும் யதார்த்­த­மாக அவ­ச­ர­கா­லச் சூழ்­நிலை­களைச் சித்­தி­ரிக்­கும் கணினித் திட்டம் ஒன்று நேற்று முதல் பயன்­பாட்­டுக்கு விடப்­பட்­டுள்­ளது. 'ஏர்­போர்ட் ஃபோம் டெண்டர் டிரைவிங் சிமியுலேட்­டர்' எனப்­படும் அந்தப் பயிற்­சிச் சாதனமா­னது விமா­ன­ நிலை­யங்களில் தீயணைப்­ப­தற்­காக நுரை, நீரைப்பயன்­படுத்­தக்­ கூ­டிய 'ஃபோம் டெண்டர்ஸ்' எனப்­படும் சிறப்பு வாக­னங்களை ஓட்­டக்­கூ­டிய ஊழி­யர்­களுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­ப­தற்­காக வடி­வமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் புதிய சாதனமானது விமான விபத்­து­கள், தீப்­பற்றி எரியும் விமா­னத்­தி­லி­ருந்து பய­ணி­கள் வெளி­யேற்­றப்­படு­தல் போன்ற அவ­ச­ர­கா­லச் சூழல்­களைச் சித்­தி­ரிக்­கும். சாங்கி விமான நிலை­யத்­தின் நான் கா­வது முனைய வரை­ப­ட­மும் இந்தச் செய­லி­யில் உள்ளீடு செய்­யப்பட்­டுள்­ளது. அதி­க­ரித்து வரும் விமானப் போக்­கு­வ­ரத்து கார­ண­மாக விமான நிலைய ஊழி­யர்­களைத் தயார்­நிலை­யில் வைப்பது அவ­சி­ய­மா­கிறது என சாங்கி விமா­ன ­நிலை­யக் குழு­மத்­தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ சியோ ஹியாங் கூறினார்.

விமான நிலைய அவசரகாலச் சேவைகள் அதிகாரி முகமது யாஸிட், 46, புதிய 'ஏர்­போர்ட் ஃபோம் டெண்டர் டிரைவிங் சிமு­லேட்­டர்' சாதனத்தைச் செயல்படுத்திக் காட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!