வயிற்றுப் பிரச்சினை: 180 பேர் பாதிப்பு

ஓவன் ரோடு பகு­தி­யில் 180க்கும் அதி­க­மா­னோ­ருக்கு வயிற்­றுப் பகு­தி­யில் நோய் (ga­s­t­r­o­e­n­t­e­ri­tis) ஏற்­பட்­டத்தைத் தொடர்ந்து பெக் கியோ ஈர­ச் சந்தை­யும் உண­வங்கா­டி­யும் சுத்­தி­க­ரிப்பு, கிருமி அழிப்பு பணி­களுக்­காக இன்றும் நாளை யும் மூடப்­படு­கிறது. ஈரச்­ சந்தை­யும் உண­வங்கா­டி­யும் வெள்­ளிக்­கிழமை மீண்டும் திறக்­கப்­படும். அந்த வட்­டா­ரத்­தில் நேற்று வரையில் பல­ருக்கு வயிற்­றுப் பகு­தி­யில் நோய் ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து சுகாதார அமைச்சு, தேசிய சுற்­றுப்­புற வாரியம், சிங்கப்­பூர் வேளாண், உணவு, கால்நடை வாரியம், பொதுப் பய­னீட்­டுக்­கழகம் ஆகியவை விசா­ரித்து வரு­கின்றன. விசாரணை முடிவு பெற­வில்லை. எனினும், தற்­காப்பு நட­வ­டிக்கை­யாக அப்­ப­கு­தி­வா­சி­கள் அடிக்­கடி உணவு உண்ணும் பெக் கியோ ஈரச் ­சந்தை, உண­வங்கா­டியை தேசிய சுற்­றுப்­புற வாரியம் மூடு­கிறது.

Loading...
Load next