மென்பொருள் திருட்டு விகிதம் 2% குறைந்தது

சிங்கப்­பூ­ரில் மென்­பொ­ருள் திருட்டு கடந்த மூன்றாண்­டு­களில் குறைந்­தி­ருப்­ப­தாக அனைத்­து­லக மென்­பொ­ருள் கருத்­தாய்வு தெரி­விக்­கிறது. ஆனாலும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்­கிடையே ஒப்­பி­டுகை­யில், மென்­பொ­ருள் திருட்­டில் சிங்கப்­பூர் தொடர்ந்து முக்கிய இடம்பிடித்து வரு­கிறது. உரிமம் இல்லாத மென்­பொ­ருட்­களைப் பயன்­படுத்­து­வதன் தொடர்­ பில் அனைத்­து­லக அளவில் சந்தைப்­படுத்­தும் தொழில்­துறைக் கண்­கா­ணிப்பு அமைப்­பான பிஎஸ்ஏ, சந்தை ஆய்வு நிறு­வ­னம் ஐடிசி ஆகியன ஆய்வு மேற்­ கொண்டன.

அவை நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யின்­படி, மூன்றில் ஒரு பய­னீட்­டா­ளர்­கள், தகவல் தொழில்­நுட்ப மேலா­ளர்­கள், நிறு­வ­னங் களில் கணினி பயன்­படுத்­து­வோர் ஆகியோர் குறைந்த­பட்­சம் ஒரு உரிமம் இல்லாத மென்­பொ­ருளை­யா­வது பயன்­படுத்­து­வது தெரி­ய ­வந்­துள்­ளது. கடந்த ஆண்டில் வீடுகள், அலு­வ­ல­கங்களில் பயன்­படுத்­தப்­பட்ட மென்­பொ­ருட்­களில் 30% உரிமம் இல்­லா­தவை. 2013ஆம் ஆண்டில் அந்த அளவு 32 விழுக்­கா­டாக இருந்தது.