‘அசாதாரணத் திறமைசாலி’ என பிரதமர் புகழாரம்; இணையவாசிகளை ஈர்த்த டேரன் சோ

உள்ளூர் கட்­­­ட­­­டக்­­­கலை, நில­ வ­­னப்பு புகைப்­­­ப­­­டக்­­­கா­­­ரர் டேரன் சோ, 40, செம்ப­­­வாங்­­­கில் எடுத்த மின்னல் புகைப்­­­ப­­­டம் (இடது படம்) ஆயி­­­ரக்­­­க­­­ணக்­­­கா­­­னோ­­­ரால் பாராட்­­­டப்­­­பட்­­­டுள்­­­ளது. சமூக வலைத்­­­த­­­ளங்களில் அந்தப் புகைப்­­­ப­­­டம் ஏற்­­­படுத்­­­திய தாக்­கத்­தால் திரு சோ மகிழ்ச்­­­சி­­­யில் திளைத்­­­தி­­­ருக்­­­கிறார். தாம் எடுத்த மற்ற படங்களை­­­விட இது சற்று மேம்பட்­­­டி­­­ருந்தா­­­லும் அதற்கு இவ்­வ­ளவு வர­­­வேற்பை எதிர்­­­பார்க்­­­க­­­வில்லை என ஸ்ட்­­­ரெய்ட்ஸ் டைம்­­­சி­­­டம் சோ நேற்று தெரி­­­வித்­­­தார். கடந்த ஞாயிற்­­­றுக்­­­கிழமை 'ஃபேஸ்­­­புக்'கில் பதி­­­வேற்­­­றப்­­­பட்­­­ட­ தி­­லி­­­ருந்து இந்தப் புகைப்­­­ப­­­டம் 43,000க்கும் மேற்­­­பட்ட 'லைக்' களை­­­யும் 14,000க்கும் மேற்­­­பட்ட பகிர்­­­வு­­­களை­­­யும் பெற்­­­றுள்­­­ளது. அனைத்­­­து­­­லக செய்தி இணை­­­யத்­­­த­­­ளங்களி­­­லும் இந்தப் படம் பதி­­­வேற்­­­றப்­­­பட்­­­டி­­­ருந்தது.

இந்தப் படத்தை தமது 'ஃபேஸ்­­­புக்' பக்­­­கத்­­­தில் பிர­­­த­­­மர் லீ சியன் லூங் பகிர்ந்த­­­து­­­டன் "ஒவ்வொரு நாளையும் அசா­­­தா­­­ர­­­ண­­­மாக்­­­கும் நுட்­­­ப­­­மான திறம்," என்று திரு சோவைப் புகழ்ந்­­­தி­­­ருக்­­­கிறார். செம்ப­­­வாங்­­­கில் உள்ள மாண்ட்­­­ரீல் லிங்க் வீடமைப்பு வளர்ச்­­­சிக் கழக (வீவக) குடி­­­யி­­­ருப்­­­பின் 16வது மாடி­­­யி­­­லி­­­ருந்து ஜோகூர் நீரிணையை நோக்கி, கடந்த ஞாயிற்­­­றுக்­­­கிழமை மாலை திரு சோ எடுத்த சுமார் 100 புகைப்­­­ப­­­டங்களில் இதுவும் ஒன்று. மின்னல் புகைப்­­­ப­­­டங்களை எடுக்க கடந்த நான்கு ஆண்­­­டு­­­க­­­ளாக முயன்று வந்த­­­தா­­­க­­­வும் தற்போது அந்த வாய்ப்பு நல்ல முறையில் கைகூடி வந்­­­தி­­­ருப்­­­ப­­­தா­­­க­­­வும் திரு சோ சொன்னார்.

புகைப்படக் கலைஞர் டேரன் சோ. படம்: ஜான் ஹெங்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!