சிங்கப்பூர் சேவைத் துறையின் வருமானம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 0.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதற்கு முந்திய காலாண்டில் இது எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. எனினும் காலாண்டு அடிப்படையில் ஒப்புநோக்க, மொத்த வரவு 3.8 விழுக்காடு குறைந்துள்ளது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் பெரும்பாலான தொழில்கள் வளர்ச்சியைக் கண்டுள்ளன. சுகாதாரம், சமூக சேவை இரண்டும் 5.1% வளர்ச்சி கண்டன. தகவல், தொடர்பு 1.7%, கல்விச் சேவைகள் 1.2%, நிதி, காப்புறுதி 0.95, வர்த்தக சேவைத் துறைகள் 0.5% வளர்ச்சியைக் கண்டுள்ளன.
ஆனால், பொழுதுபோக்கு தனிமனிதர் சேவைத்துறையில் விற்பனை 9.9% குறைந்தது. போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு சேவை ஆகிய துறைகளில் 0.8% சரிந்தது. புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட இந்தப் புள்ளிவிவரத்தில் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, தங்குமிட வசதி, உணவு சேவைகள் பற்றிய புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட வில்லை.