புதிய கிம் மோ விளையாட்டுத் திடல்

கிம் மோ குடியிருப்புப் பேட்டையில் ‘எஸ்எம்ஆர்டி கிம் மோ’ எல்லாருக்குமான பலநோக்கு விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் புதிய பலநோக்கு பொழுதுபோக்கு வசதிகளை அங்கு பெறலாம். இளையர்கள், முதியவர்கள், சிறப்பு உதவிகள் தேவைப்படக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம். தேசிய சமுக சேவை மன்றம், ஹாலந்து - புக்கிட் பாஞ்சாங் நகர மன்றம், சமூக உண்டியலின் பரிவு, பகிர்வு இயக்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக புதிய விளையாட்டு இடம் உருவாகி இருக்கிறது.