சமூகப் பிணைப்பு வலுவாக இளையர் உறுதி

நெருக்கடி நேரத்தில் பரவும் வதந்திகளை ஒடுக்குவதில் சமூ கத் தலைவர்களுக்கும் அமைப்பு களுக்கும் முக்கிய பங்கு இருக் கிறது என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். பல இன, பல சமய சிங்கப் பூரில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் தேவைப்படக்கூடிய உணர்வுகளை இளையர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும்படி சமூகத் தலைவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

கலாசார, சமூக இளையர்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மரினா மாண்டரின் ஹோட்டலில் நேற்று அனைத்து இன, சமய நன்னம் பிக்கைக் குழுவின் பயிலரங்கு நடந்தது. அதில் அமைச்சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாடிய போது நெருக்கடி நேரத்தில் கிளம் பும் புரளிகள் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச் சரித்தார்.

இத்தகைய புரளிகளை ஒடுக்க வேண்டுமானால் சரியான நேரத் தில் மக்களுக்குச் சரியான, துல் லியமான தகவல்கள் தெரிவிக்கப் பட வேண்டும். இப்படிச் செய்தால் தவறான தகவல்கள் அடிபட்டுப் போய்விடும் என்றார் அமைச்சர். ஒருவர் மற்றொருவரின் நம் பிக்கைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற நன்னெறியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டியது முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தி னார். இப்படிச் செய்வதன் மூலம் இளையரிடம் பொய்களையும் தவ றான தகவல்களையும் நிராகரிக்கும் பலம் ஏற்படும் என்றார் அமைச்சர்.

சமூகப் பிணைப்புக்கு தங்கள் பங்கை எப்படி எப்படி எல்லாம் ஆற்றலாம் என்பதைப் பற்றி இளையர்கள் விவாதித்ததை அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இருவரும் செவிமடுத்தனர். படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!