போப்பாண்டவரை சந்தித்தார் அதிபர் டான்

அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம் நேற்று வத்திகன் நகரில் போப் ஆண்டவரைச் சந் தித்தார். வத்திகன் நகரில் போப்பாண் டவரை சந்திக்கும் சிங்கப்பூரின் முதலாவது நாட்டுத் தலைவர் டாக்டர் டோனி டான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டான், ஒருவார கால அரசுமுறைப் பயணம் மேற் கொண்டு ரோம், வெனிஸ் நகர் களுக்குச் சென்றார். அந்தப் பய ணத்தின் கடைசிக் கட்டமாக அவர் வத்திகன் சென்றார்.

சிங்கப்பூருக்கும் வத்திகனுக் கும் இடைப்பட்ட உறவுகளை அதிபர் டானும் போப் பிரான்சிசும் மறுஉறுதிப்படுத்தினர். இரு நாடுகளின் அரும்பொருள கங்களுக்கும் அமைப்புகளுக்கும் இடையில் சாத்தியமான ஒத்து ழைப்பு குறித்து ஆராயவும் உறவு களைப் பலப்படுத்தவும் இருவரும் விருப்பம் தெரிவித்தனர்.

சமய, இன நல்லிணக்கத்தைப் பேணிக் காத்து பலப்படுத்துவதில் சிங்கப்பூருக்கு உள்ள அனுப வத்தை போப் பிரான்சிசுடன் டாக்டர் டோனி டான் பகிர்ந்து கொண்டார். அதிபர், சென்ற ஆண்டு சிங்கப்பூருக்கு வருகை அளித்த வத்திகன் வெளியுறவு அமைச்சர் பெட்ரோ பரோலினையும் சந்தித் தார். சிங்கப்பூரில் கத்தோலிக்கத் தேவாலயத்தைப் பொறுத்தவரை யில் வத்திகனுக்கு டாக்டர் டான் மேற்கொண்ட பயணம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக் கிறது.

அதிபர் டோனி டான் கெங் யாமும் (இடது) போப்பாண்டவர் பிரான்சிசும் நேற்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர். டாக்டர் டான், சிங்கப்பூரில் உள்ள கரையோரப் பூந்தோட்டங்களின் கலைப்படைப்பு ஒன்றை போப்பாண்டவருக்குப் பரிசாக அளித்தார். போப்பாண்டவரோ, பாறைகளை ஒன்றிணைக்கும் ஆலிவ் மரம் பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றையும் தாம் எழுதிய மூன்று நூல்களையும் அதிபர் டானுக்குப் பரிசாக அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!