பூமலையின் வரலாற்றைக் காட்டும் புதிய மரபுடைமைத் தோட்டம்

சிங்கப்பூர் பூமலையின் சமூக வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு புதிய மரபுடைமைத் தோட்டத்தைச் சிங்கப்பூரர்கள் இப்போது காணலாம். சுவான் ஏரியை நோக்கியபடி அமைந்திருக்கும் அந்தத் தோட்டத்தில் சுமார் 80 தாவரச் சிற்றினங்கள் இருக்கின்றன. அந்தச் சிற்றினங்களில் பலவும் முதன்முதலாக பூமலையில் பயிரிடப்பட்டு பிறகு ‘பசுமை நகர்’ இயக்கத்தின் பகுதியாக தீவு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன.

பூமலை தன்னுடைய முதலாவது பாரம்பரிய வார கொண்டாட்டத்தைச் சனிக்கிழமை தொடங்கியது. சிங்கப்பூரில் சமூக, கலாசார வரலாற்றில் பூமலையின் பங்கை போற்றிக் கொண்டாடுவது இந்த ஒரு வாரகால நிகழ்ச்சியின் நோக்கம். பல கலாசார இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், ஆர்க்கிட் தோட்டத்தை இலவசமாக காண்பது போன்ற பலவும் மக்களுக்காக ஜூன் 5ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடாந்திர தொடக்க நிகழ்ச்சியை தேசிய மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா