கார் இல்லாமல் வந்த களிப்பு, குடும்ப மகிழ்ச்சி, மன நெகிழ்ச்சி

குடிமை வட்டாரத்தில் நேற்று கார் இல்லாத நான்காவது ஞாயிறு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இலேசான மழை பெய்தாலும் மக்கள் கார் இல்லாத சாலைகளில் தங்கள் விருப்பப்படி நடந்தார்கள், சைக்கிள் ஓட்டினார்கள், செல்லப் பிராணி களை அழைத்து வந்து மகிழ்ந் தார்கள், குடும்பத்துடன் உலா சென்றார்கள். அந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட 'குடும்ப வாழ்க்கை பெருநடை' நிகழ்ச்சியின்போது மழை இல்லாமல் வானம் தெளிந்துவிட்டது. சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜூன் நேற்று காலை 7.30 மணிக்கு அந்தப் பெருநடையைத் தொடங்கி வைத்தார்.

அதில் சுமார் 13,000 பேர் கலந்து கொண்டார்கள். நேஷனல் கேலரி சிங்கப்பூர் முதல் எம்பிரஸ் லேன் வரைப்பட்ட 1.5 கி.மீ தொலைவுக்கு அவர்கள் நடந்தனர். இசையைக் கேட்டனர். உணவுப் பொருட்களை உண்ட னர். உடலுறுதிப் பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். குடும்ப வாழ்க்கை என்ற லாப நோக்கற்ற அமைப்பு ஆண்டு தோறும் இப்பெருநடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது. கார் இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த வருடாந்திர குடும்ப வாழ்க்கை கொண்டாட் டங்களை நடத்துவது நல்ல யோசனை என்று அங்கு செய்தி யாளரிடம் பேசிய அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற இதர பல நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி தமது அமைச்சு ஆராயும் என்றார் அவர்.

குடும்ப வாழ்க்கை பெருநடையில் வென்ற ஆகப்பெரிய குடும்ப அணியும் சிறந்த உடை குடும்பமும். படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!