சில குற்றங்களை ஒப்புக்கொள்ள இருக்கும் சுற்றுலா வழிகாட்டி யாங்

முன்னாள் சீன வழிகாட்டி யாங் யின் தன் மீதான, குடிநுழைவுக் குற்றங்கள், தனது நிறுவனத்தின் போலி ரசீதுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வார் என்று கூறப் படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது வழக்கறிஞர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும். திருவாட்டி சுங் கின் சுன் என்பவரின் $1.1 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை நம்பிக்கை மோசடி செய்தது தொடர்பான இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். அது தொடர்பான வழக்கு ஜூன், ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வரும்.