16ல் ஐந்து நகர மன்றங்கள் மட்டுமே நான்கு பிரிவுகளிலும் பச்சைக் குறியீடு

பேட்டைத் தூய்மை, மின்­தூக்கி பரா­ம­ரிப்பு போன்ற செயல்­பாடு­களில் மொத்­த­முள்ள 16 நகர மன்றங்களில் பெரும்பா­லா­னவை சிறப்­பா­கச் செயல்­படு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சின் அண்மைய நகர மன்ற நிர்வாக அறிக்கை தெரி­விக்­கிறது. இருப்­பி­னும் சில நகர மன்றங்களில் பேட்டை­களின் பரா­ம­ரிப்பு, சேவை, துப்­பு­ர­வுக் கட்டண நிலுவை நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றில் மேம்பாட்­டுக்கு இட­மி­ருப்­ப­தா­க­வும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அனைத்து நகர மன்றங்களும் சந்தைத் தூய்மை, சந்தைப் பரா­ம­ரிப்பு, பேட்டை­களின் பரா­ம­ரிப்பு, சேவை, துப்­பு­ர­வுக் கட்டண நிலுவை நிர்­வா­கம், மின்­தூக்­கிச் செயல்­பாடு ஆகிய நான்கு குறிகாட்­டி­களின் அடிப்­படை­யில் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை மதிப்­பீடு செய்­யப்­பட்டு இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது.

ஒவ்வொரு குறிகாட்­டி­யி­லும் பச்சை, ஆம்பர், சிவப்பு என மூன்று வண்­ணங்கள் பயன்­படுத்­தப்­பட்­டன. நகர மன்றங்கள், அவற்­றின் தணிக்கை­யா­ளர்­கள் அள­வி­டக்­கூ­டிய அம்­சங்களின் அடிப்­படை­யில் இந்த வண்­ணங்களைப் பயன்­படுத்தி குறி­யிட்­ட­னர்.

அனைத்துப் பிரிவுகளிலும் பச்சை நிறக் குறியீடு பெற்ற ஐந்து நகர மன்றங்களில் ஒன்றான நீ சூன் நகர மன்றத்தில் துப்புரவாளர்களின் வேலைத் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவர்களது பயன்பாட்டுக்கு மூன்று சக்கர சைக்கிள் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. படம்: நீ சூன் நகர மன்றம்