குறை ஊதியத்தினர் சம்பளம் உயரும்

குறைவாக வருவாய் ஈட்டுவோர் இறுக்கமான பொருளியல் நிலவரத்துக்கு இடையிலும் மீண்டும் ஒரு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அடிப்படைச் சம்பளம் $1,100 வரை ஈட்டும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தை 50 வெள்ளி முதல் 65 வெள்ளி வரை உயர்த்த தேசிய சம்பள மன்றம் செய்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை குறைந்தபட்ச சம்பள உயர்வுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. இவ்வளவிலிருந்து இவ்வளவு வரை என்னும் நிர்ணய பரிந் துரை இப்போதுதான் முதன் முறையாக செய்யப்பட்டுள்ளது.

குறைந்த ஊதியம் ஈட்டு வோரின் நலனில் அக்கறை காட்டத் தொடங்கிய பின்னர் மன்றம் பரிந்துரைக்கும் ஐந்தா வது சம்பள உயர்வு இது. மனிதவள அமைச்சின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட் டத்தில் பரிந்துரைகளை மன்றத் தின் தலைவர் பீட்டர் சியா விளக் கினார். ஒவ்வொரு நிறுவனத் தின் செயல்பாட்டிற்கு இணங்க வும் சம்பளப் பரிந்துரையில் மாற்றம் செய்யப்படுவதாக அவர் சொன்னார். கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்தபட்சம் 60 வெள்ளி சம்பள உயர்வுக்கு மன்றம் பரிந் துரை செய்து வந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு $50 உயர்த்த அது யோசனை கூறியது.

அங் மோ கியோ காப்பிக்கடையில் மேசையைச் சுத்தம் செய்யும் ஊழியர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்