பங்ளாதே‌ஷியர் நால்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்களில் நால்வர் பயங்கர வாதத்திற்கு நிதியுதவி வழங்கிய அல்லது நிதி திரட்டிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஹ்மான் மிஸானுர், 31, மியா ரூபெல், 26, சொஹெல் ஹௌலதர் இஸ்மாயில் ஹௌலதர், 29, முகம்மது ஜபாத் கைசர் ஹாஜே நோருல் இஸ்லாம் சௌடகர், 31, ஆகிய அந்த நால்வரும் நீதிமன்றத் தில் நேற்று தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். பங்ளாதே‌ஷில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்வதற்காக நிதி வழங்கியதாக அல்லது நிதி திரட்டியதாக அவர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட அறுவரில் ஸாமான் தௌலத், 34, மமூன் லியாகத் அலி, 29, என்ற இரு வரும் தங்கள் மீதான குற்றச் சாட்டை மறுத்தனர்.

அவர்களுக்கான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் இம்மாதம் 9ஆம் தேதி இடம்பெறுகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் கொடுக் கப்பட்டிருந்ததை நீதிமன்ற ஆவ ணங்கள் காட்டின. அக்குழுவின் தலைவராக ரஹ்மானும் துணைத் தலைவராக மமூனும் செயல்பட் டனர். குழுவின் நிதிப் பிரிவை மியாவும் ஊடகப் பிரிவை ஜபாத் தும் கவனித்துக்கொண்2டனர். ஸாமான், சொஹெல் ஆகியோர் முறையே குழுவின் பாதுகாப்பு, போர் வீரர்கள் பிரிவில் இருந்தனர். மியாவும் ஜபாத்தும் பயங்கரவாத நோக்கங்களுக்காக பணம் வைத் திருந்தனர் என்ற இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கு கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை