பணிப்பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை

தம்முடைய முதலாளியின் தலையைச் சுவற்றில் மோதச் செய்து, பின் அவரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து சாகடித்த இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. சமூக ஆர்வலரான 69 வயது திருவாட்டி நான்சி கான் வான் கியோக்கிற்கு மரணம் விளைவித்ததை ஒப்புக் கொண்டார் தேவி சுகோவத்தி, 20. அந்த வீட்டில் பணிக்குச் சேர்ந்த ஏழாவது நாளில், தேவி கண்ணாடிக் குவளையில் தண்ணீர் எடுத்து திருவாட்டி நான்சியிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தக் குவளையைச் சரியான தட்டில் வைத்து எடுத்து வரவில்லை எனக் கூறி, தண்ணீரை அவரது முகத்திலேயே ஊற்றிவிட்டு, தட்டைத் தூக்கி எறிந்துள்ளார் திருவாட்டி நான்சி.

கீழே விழுந்த தட்டை தேவி மண்டியிட்டுக் குனிந்து எடுக்க, திருவாட்டி நான்சி அதைப் பிடுங்கி அவரை அடித்ததாகக் கூறப்பட்டது. பிறகு, அவரைத் திட்டியதுடன் சம்பளத்தையும் $200ஆகக் குறைத்து விடுவதாக மிரட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த தேவி, அவரது முடியைப் பிடித்து இழுத்து பலங்கொண்ட மட்டும் அவரது தலையைச் சுவற்றில் மோதச் செய்தார். இதையடுத்து, அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட, அவர் மயக்கமடைந்தார். பின் அவரை இழுத்துச் சென்று நீச்சல் குளத்தில் மூழ்கடித்த தேவி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்களை நம்ப வைப்பதற்காக அவரது காலணிகளை நீச்சல் குளத்தில் எறிந்ததாகவும் சொல்லப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!