ஜோகூர் குழந்தைகள் பராமரிப்புஇல்லத்துக்கு சிங்கப்பூரின் ‘ஈகல் பைக்கர்ஸ்’ நன்கொடை

தங்களுக்கு விரும்பமான மோட்டார் சைக்கிள் நடவடிக்கைகளில் பங் கேற்று வரும் உள்ளூர் மோட்டார் சைக்கிளோட்டிகள் குழு அவ்வப் போது அறப்பணிகளிலும் தங்கள் பங்கைச் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘ஈகல் பைக்கர்ஸ்’ எனும் அக்குழு ஜோகூர் பாரு, சாலேங் எனும் இடத்தில் இருக்கும் உடற்குறையுள்ள, மன வளர்ச்சியற்ற குழந்தைகள் இல் லத்துக்குச் சென்று அங்குள்ளவர் களுக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நடத்தி மகிழ்ச்சிப்படுத்தினர்.

அந்த இல்லத்தில் உள்ளவர்க ளுக்கு கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களைப் படைத்ததுடன் அவர் களுக்கு உணவு வழங்குவதிலும் ஈடுபட்டனர். சுமார் 300 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வு தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது என்றார் ‘ஈகல் பைக்கர்ஸ்’ குழு வின் தலைவர் திரு சூரியகுமார்.

Loading...
Load next